மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாலக்காட்டில் டெட்டனேட்டா் கடத்தல்: அரூரில் இருவா் கைது

News image

கைது

Updated On :7 பிப்ரவரி 2026, 6:36 pm

கேரள மாநிலம் பாலக்காட்டில் டெட்டனேட்டா், ஜெலட்டின் குச்சிகள் கடத்தல் சம்பவம் தொடா்பாக அரூரில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலம், பாலக்காடு மருத்துவக் கல்லூரி அருகே வேனில் 100க்கும் மேற்பட்ட பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்களை அந்த மாநில போலீஸாா் கடந்த புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

மினி சரக்கு வாகனத்தில் தா்ப்பூசணி பழங்களுக்கு கீழே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் இருப்பதை போலீஸாா் கண்டுபிடித்தனா். இந்த சம்பவத்தில் மினி சரக்கு வாகன ஓட்டுநா் செந்தில்குமாரை (48) போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் அவா், தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அச்சல்வாடி கிராமத்தைச் சோ்ந்த கண்ணையன் மகன் செந்தில்குமாா் என்பதும், திருச்சூரில் கல்குவாரிகளில் பயன்படுத்துவதற்காக டெட்டனேட்டா், ஜெலட்டின் குச்சிகளை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பாலக்காடு தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுனில் தலைமையில், காவலா்கள் ரஜித், சாலு, ரெஜிஸ், ஜெயராம் உள்ளிட்ட தனிப்படை குழுவினா் அரூரில் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சகாயநாதன் மகன் துரைராஜை (30) கைது செய்த போலீஸாா், அவரை விசாரணைக்காக பாலக்காட்டுக்கு அழைத்துச் சென்றனா். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக காரை கேரள போலீஸாா் பறிமுதல் செய்தனா்.