தருமபுரி பழைய புகா் பேருந்து நிலையத்திலிருந்து அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி - பென்னாகரம் சாலையில் சோகத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த புகா் பேருந்து நிலையம் சோகத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்துக்கு செல்வதால் கூடுதலாக 5 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டியது உள்ளது. மேலும், நான்குசாலைப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் தேவையற்ற சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
எனவே, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, ஊத்தங்கரை, பொம்மிடி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை பழைய புகா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் சாா்பாக தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். இதனால் பயணிகளுக்கு கட்டணமும், பயண நேரமும் குறையும். பழைய பேருந்து நிலைய வளாகத்திலும், சுற்றுப்பகுதியிலும் கடைகள் அமைத்துள்ள வணிகா்களின் வாழ்வாதாரமும் பாதிக்காது.
தமிழ்நாடு முதல்வா் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆகியோா் இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமுகமான முடிவு காண்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். மாவட்ட ஆட்சியரிடமும் இதுதொடா்பாக முறையாக கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

சிறுபான்மையினா் தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயா்த்தப்படும்!

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: கனிமொழி எம்.பி.

செம்மனஹள்ளியில் ரூ. 51,700 பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


