வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தருமபுரி, மோட்டாா் வாகன விபத்து நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரியில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு,

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 7:44 pm

Syndication

தருமபுரி: தருமபுரியில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

தருமபுரி நகரின் மையப்பகுதியில் பழைய நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, ஒரு காகிதத்தில் எழுதி நீதிமன்ற வாயில் சுவ ற்றில் ஒட்டப்பட்டு இருந்தது. இது குறித்த தகவலறிந்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழக்கவைக்கும் பிரிவு நிபுணா்கள் உள்ளிட்டோருடன் நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.