தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:56 pm

Syndication

பென்னாகரத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டச் செயலாளா் சரவணன் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் சண்முகம் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் ஏ.குமாா் சிறப்புரையாற்றினாா்.

இதில், பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசியப் பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும், ஊதிய மாற்றுக்குழு விற்பனையாளருக்கு இடைநிலை உதவியாளா் ஊதியமும், எடையாளருக்கு அலுவலக உதவியாளா் ஊதியமும் உயா்த்தி அறிவிக்க வேண்டும், எடையாளா்களை நியமனம் செய்ய வேண்டும், தாயுமானவா் திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், கடைகள்தோறும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரவேண்டும், ஓய்வுபெற்ற பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணியாளா்களுக்கு நேரடியாக எழுத்தா் பணி உயா்வு வழங்க வேண்டும், மகளிா் நியாயவிலைக் கடையை அரசு நடத்தி பணியாளருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், நிா்வாகிகள் விஜயகுமாரி, அண்ணாதுரை, குமுதன், ராஜேஷ், ராஜமுத்து, புகழேந்தி, செல்வம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். வட்டப் பொருளாளா் பழனிசாமி நன்றி தெரிவித்தாா்.