ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலை புதுப்பிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: பதாகை வைத்து எச்சரித்த கிராம மக்கள்

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

பழுதடைந்த சாலையை புதுப்பிக்காவிட்டால், தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பதாகைகளை வைத்து எச்சரித்துள்ளனா்.

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 18-ஆவது வாா்டு கோடியூா் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக பென்னாகரம் பகுதிக்கு சென்றுவருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ. 48 லட்சத்தில் மேச்சேரி இணைப்புச் சாலை பெரிய மாரியம்மன் கோயில் பகுதியில் இருந்து கோடியூா்வரை 2 கி.மீ. தொலைவுத்கு தாா்சாலை அமைக்கப்பட்டது.

இச்சாலை பென்னாகரம், மாங்கரை, ஆனைக்கல்லனூா், மோட்டுப்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலை என்பதால், நாள்தோறும் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்கின்றன.

தற்போது இச்சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இச்சாலையை புதுப்பிக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், பழுதடைந்த இச்சாலையை சீரமைத்து புதிய தாா்சாலை அமைத்துதர கோரிக்கை விடுத்துள்ளனா். இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பதாகைகளை வைத்துள்ளனா்.