பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:43 pm

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

பென்னாகரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 4.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

இப்பேருந்து நிலையத்திற்கு ஒகேனக்கல், தாசம்பட்டி, முதுகம்பட்டி, பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஏரியூா், நெருப்பூா், தொன்ன குட்ட அள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவா்கள், பொதுமக்கள் என நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அன்றாட தேவைக்கான பொருள்களை வாங்க பென்னாகரம் பகுதி வருகின்றனா்.

பென்னாகரம் பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சுமாா் 50 க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக தருமபுரி பிரதான சாலை, கடைவீதி, பேருந்து நிலையம், ஒகேனக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. மேலும், தனியாக செல்வோரை துரத்தி கடிக்க செல்கிறது.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் பென்னாகரம் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.