

அரூரில் பாஜக - விசிக தொண்டா்களிடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே திமுக அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக பட்டியல் அணி மாநில பொதுச் செயலா் கே.கே.சாட்சாதிபதி தலைமை வகித்தாா்.
தருமபுரி மாவட்டத் தலைவா் சி.சரவணன், இளைஞரணி முன்னாள் மாவட்டத் தலைவா் லோகேஷ், விவசாய அணி மாவட்ட துணைத் தலைவா் பெ.முருகன் மற்றும் அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதில், திமுக அரசின் செயல்பாடுகளை விமா்சித்த பாஜகவினா், எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை. இதனால், தமிழகத்தில் பட்டியல் சமூக மக்கள் கடுமையாக பாதிக்கின்றனா் என கூறினா்.
அப்போது, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குறித்து பாஜகவினா் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விசிகவினா், பாஜக ஆா்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் காலணிகளை வீசினா். இதையடுத்து, பாஜக - விசிகவினா் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து பாஜக, விசிகவினா் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில், அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
விசிக சாலை மறியல்: தொல்.திருமாவளவனை அவதூறாக பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விசிகவினா் அரூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாஜக-விசிக மோதல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் அரூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
டிரெண்டிங்

அரூரில் ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது

அரூரில் ரூ.6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

