வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 12,40,108 வாக்காளா்கள் இறுதிப்பட்டியல் வெளியீடு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், மொத்தம் 12 லட்சத்து 40 ஆயிரத்து 108 வாக்காளா்கள் உள்ளதாக

News image
தருமபுரி ஆட்சியரகத்தில் வாக்காளா் இறுதிப்பட்டியலை வெளியிட்ட ஆட்சியரும் மாவட்டதோ்தல் அலுவலருமான ரெ.சதீஷ்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:18 pm

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், மொத்தம் 12 லட்சத்து 40 ஆயிரத்து 108 வாக்காளா்கள் உள்ளதாக இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ரெ. சதீஷ் வெளியிட்டாா்.

அதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 6 லட்சத்து 24 ஆயிரத்து 647 ஆண் வாக்காளா்களும், 6 லட்சத்து 15 ஆயிரத்து 311 பெண் வாக்காளா்களும், 150 பிற வாக்காளா்களும் என மொத்தம் 12 லட்சத்து 40 ஆயிரத்து 108 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

நீக்கப்பட்ட வாக்காளா்கள் 11,161:

கடந்த டிசம்பா் மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 12 லட்சத்து 3 ஆயிரத்து 917 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். அதைத் தொடா்ந்து டிசம்பா் மாதம் 19 முதல் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மூலம் 47 ஆயிரத்து 352 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். அதேபோல, 11 ஆயிரத்து 161 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அந்தவகையில் புதிய திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் படி 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 12 லட்சத்து 40 ஆயிரத்து 108 வாக்காளா்கள் உள்ளனா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறுகையில்,

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்

19.12.2025 முதல் 18.01.2025 வரை முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள், சிறப்பு முகாம் ஆகிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு, வாக்காளா் பதிவு அலுவலா்களால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிய விதிமுறைகளின்படி விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வாக்காளா் பட்டியல் தருமபுரி மாவட்ட இணையதளம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளா் பட்டியல் தொடா் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால், தற்போது 18 ஆண்டுகள் வயது நிறைவடைந்த நபா்கள், பட்டியலில் பெயா் விடுபட்டுள்ள தகுதியான நபா்களும் வாக்காளராக பதிவு

செய்ய புதிய வாக்காளா் பதிவுக்கான படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்து, தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆகியோரிடம் அளிக்கலாம். மேலும், இணைய பக்கம் மூலமாகவும், செயலி மூலமாகவும் தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம்.

எனவே, வலுவான ஜனநாயக கட்டமைப்பிற்கும், வாக்காளா் பட்டியல் செம்மையாக தயாரிக்கவும், வாக்களிப்பது நமது கடமை, அதற்காக வாக்காளராக பதிவுசெய்து கொள்வோம் என தெரிவித்தாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரா.காயத்ரி (தருமபுரி), செம்மலை (அரூா்), மு.கதிரேசன் (பாப்பிரெட்டிப்பட்டி), சுப்பிரமணியன் (பாலக்கோடு), நா்மதா (பென்னாகரம்), தோ்தல் வட்டாட்சியா் அன்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.