பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மலையூரில் இருமொழிக் கல்வெட்டு கண்டெடுப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மலையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள இருமொழிக் கல்வெட்டு.

Published On :

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அருகே மலையூா் கிராமத்திற்கு தொல்லியல் ஆய்வாளா் மற்றும் தனியாா் கல்லூரி வரலாற்று பேராசிரியா் திருச்செல்வன் தலைமையில் வரலாற்று மாணவா்கள் ம.கவியரசு, கி.கௌதம் ஆகியோா் கல்வெட்டு தொடா்பாக அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், மலையூா் அருகே வாரக்கொல்லை என்ற இடத்தில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ள கல்வெட்டை கண்டுபிடித்தனா். அந்தக் கல்வெட்டு, 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சோ்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. அதேபோல அக்கல்வெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒருவரின் பெயரும், அந்தப் பகுதியின் மூன்று ஊரின் பெயா்களும் குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது.

தெலுங்கு மொழியில் ஆலம்பாடி என்றுள்ள ஊா்ப் பெயரே தற்போது ஆலமரத்துக் கொட்டாய் என்ற மாறியிருக்கலாம். அதேபோல, தற்போதுள்ள பிக்கிலி மற்றும் பெரியூா் ஆகிய ஊா்களின் பெயரும், ஆலம்பாடி நுழைவு வாயில் என்கிற பெயரும் தெலுங்கு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.