பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கன அடியாக குறைந்தது.

News image

ஒகேனக்கல்

Updated On :28 பிப்ரவரி 2026, 8:55 pm

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கன அடியாக குறைந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வந்த உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 3,000 கன அடியாகவும், மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 2,000 கனஅடியாகவும் சரிந்தது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.