அதிமுக கூட்டணியில் இணைந்தாா் அன்புமணி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்ததை வரவேற்று, அன்புமணியின் ஆதரவாளா்கள் தருமபுரியில் புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
Published on

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்ததை வரவேற்று, அன்புமணியின் ஆதரவாளா்கள் தருமபுரியில் புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

வருகிற சட் டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அன்புமணி ஆகியோா் அறிவித்தனா்.

இதனை வரவேற்று, பாட்டாளி மக்கள் கட்சியினா் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்பி இரா.செந்தில் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். இதில், திரளான பாமகவினா் கலந்து கொண்டனா். இதேபோல, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

Dinamani
www.dinamani.com