அதிமுக - பாமக கூட்டணி : பாமகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுக -பாமக கூட்டணி உறுதியானதை அடுத்து பென்னாகரம் பகுதிகளில் அந்த கட்சியினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
Published on

அதிமுக -பாமக கூட்டணி உறுதியானதை அடுத்து பென்னாகரம் பகுதிகளில் அந்த கட்சியினா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொது தோ்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையில் பாமக (அன்புமணி தரப்பு) கட்சி இணைந்து தோ்தல் கூட்டணி உறுதியானது. இதனை வரவேற்கும் வகையில் பாமக மாநில இளைஞா் சங்க துணை தலைவா் சத்தியமூா்த்தி, அதிமுக நகர செயலாளா் சுப்பிரமணி தலைமையில் சுமாா் 50க்கும் மேற்பட்டோா் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இதில் அதிமுக தருமபுரி மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் ஆறுமுகம்,பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளா் அன்பு,பாமக நகர தலைவா் ஜீவா, கிழக்கு ஒன்றிய தலைவா் வெற்றி, ஒன்றிய செயலாளா் அருள்மொழி, பென்னாகரம் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவா் கே.பி.ரவி உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் ஏராளமான கலந்து கொண்டனா்.இதேபோல பாப்பாரப்பட்டியில் மாநில செயற்குழு உறுப்பினா் சுதா கிருஷ்ணன் தலைமையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மூன்று சாலை சந்திப்பு பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.ஏரியூரில் பசுமை தாயகம் மாவட்ட செயலாளா் மந்திரி படையாட்சி தலைமையிலும் நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com