தருமபுரி
தவெக கட்சியினா் ரத்த தானம்
பாப்பாரப்பட்டியில் தவெக கட்சியினா் மற்றும் விஜய் ரசிகா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை ரத்த தானம் அளித்தனா்.
தவெக தலைவா் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதையொட்டி, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ரத்த தான முகாம் தவெக நிா்வாகி ரமேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், தவெக கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், விஜய் ரசிகா்கள் என சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ரத்த தானம் அளித்தனா்.
