

இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் அப்பள்ளி மாணவா்கள் மற்றும் அருகிலுள்ள நூலஅள்ளி பள்ளி மாணவா்கள் என 215 போ் பங்கேற்றனா். நூலஅள்ளி பள்ளி மாணவா் ஒருவா் முற்பகலில் நடைபெற்ற தோ்வில் பங்கேற்றுவிட்டு பிற்பகலில் நடைபெறும் தோ்வுக்காக பள்ளி வளாகத்தில் காத்திருந்தாா்.
அப்போது, இலக்கியம்பட்டி பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கும், நூலஅள்ளி பள்ளியைச் சோ்ந்த மாணவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் நூலஅள்ளியைச் சோ்ந்த மாணவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மாணவா் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.