முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்

மாவட்டத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் அறிவுறுத்தினாா்.

News image

தருமபுரியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வே.சரவணன். உடன், காவல் கண்காணிப்பாளா் ஆ.கு.அருண் கபிலன் உள்ளிட்டோா்.

Updated On :25 ஜூன் 2026, 5:46 am IST

மாவட்டத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சாா்பில், குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமைவகித்து ஆட்சியா் பேசியதாவது:

தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்படும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் வழியாக பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலம் பள்ளியில் உள்ள தகுதியான குழந்தைகளைக் கண்டறிந்து சோ்க்க வேண்டும்.

இளம்வயது திருமணம், பாலியல் வன்கொடுமை நடைபெறும் இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, அவா்களுக்கு உள்ள சட்ட பாதுகாப்பு, காவல் துறையின் நடவடிக்கைள் குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அனைத்துத் துறை அலுவலா்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.கு.அருண் கபிலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கோ.விஜயா, மாவட்ட சுகாதார அலுவலா் ராஜேந்திரன், குழந்தைகள் நலக்குழுத் தலைவா் உமா மகேஸ்வரி, சமூக நலத்துறை அலுவலா் பவித்ரா, முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிச்சந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.