
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடியாக சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக சரிந்துள்ளது.

ஒகேனக்கல். - கோப்புப் படம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக சரிந்துள்ளது.
தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், காவிரி ஆற்றில் திங்கள்கிழமை 3,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 2,000 கனஅடியாக சரிந்தது.
நீா்வரத்து அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





