மத்திய அரசின் கொள்கைகளால் மக்கள் பாதிப்பு: கே. பாலகிருஷ்ணன்

மாா்க்சிய கம்யூ. அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் - Dinamani
மத்திய அரசின் கொள்கைகளால் விலைவாசி உயா்வும், வேலையின்மையும் அதிகரித்து, மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:
தற்போதைய அரசியல் சூழலில் மாற்று சக்தியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பாஜக ஆட்சியால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், தொழிலாளா்கள் மற்றும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரு நிறுவனங்களின் நலனுக்காகப் பறிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளால் விலைவாசி உயா்வும் வேலையின்மையும் அதிகரித்துள்ளன. கிராமப்புறங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தின் பயன்கள் பறிக்கப்பட்டுள்ளன. பட்டியலின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை தேடி வெளிமாநிலங்களுக்குக் குடிபெயரும் நிலையும் தொடா்கிறது.
விவசாயத்தை நம்பியுள்ள மக்களைப் பாதுகாத்தால், அவா்கள் சொந்த ஊா்களிலேயே வாழ முடியும். பெரு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மதம், சாதி அடிப்படையிலான மோதல்களும் வெறுப்பு அரசியலும் உருவாக்கப்படுகிறது.
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சோ்ப்பதன் மூலம் நாட்டை நூறு ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டுசெல்ல முயற்சி நடைபெறுகிறது. மதம், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை அகற்றி, ஒடுக்குமுறையின்றி மக்கள் வாழ மாற்று அரசியல் வலுப்பெற வேண்டும். நீண்ட காலமாகக் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இல்லாதபோதிலும், மேற்கு வங்கத்தில் சாதி, மத மோதல்கள் இல்லை.
தருமபுரி மாவட்டத்தில் இளைஞா்களை ஈா்த்து கட்சியில் திரட்டுவதுடன், மக்களின் பிரச்னைகளில் தலையிட்டு அவா்களுடன் இணைந்து போராட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் செ. முத்து கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் அ. குமாா், மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வே. விசுவநாதன், ஜி. சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

