கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விதிமீறல்களால் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு இழப்பு: எம்எல்ஏ புகார்

விதிமீறல்களால் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு இழப்பு ஏற்படுவதாக கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.செங்குட்டுவன் புகார் தெரிவித்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:03 am

DIN

விதிமீறல்களால் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு இழப்பு ஏற்படுவதாக கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.செங்குட்டுவன் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தது:
கிருஷ்ணகிரி நகராட்சியில் அனைத்து ஏலமும் குறைந்த தொகைக்கே விடப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கையால் நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய்க் குறைகிறது. கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தனியார் புத்தக கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.
இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். அதேபோல், கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில் அதன் கட்டடத்தின் பாதுகாப்பு கருதி 19 கடைகள் மட்டுமே கட்டுவதற்கு வடிவமைப்பாளர்கள் அனுமதி அளித்தனர். தற்போது, யாருடைய அனுமதியுடம் பெறாமல் 40 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.