யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜவளகிரியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணி  தீவிரம்

ஜவளகிரியில் முகாமிட்டுள்ள 25 யானைகளை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தமிழக வனத்துறையினர் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:59 am

DIN

ஜவளகிரியில் முகாமிட்டுள்ள 25 யானைகளை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தமிழக வனத்துறையினர் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஜவளகிரி அருகே கோலட்டி வனப்பகுதியில் 25 யானைகள் முகாமிட்டுள்ளன.
கர்நாடக மாநிலம், பன்னர்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் சானமாவு காட்டிற்கு கடந்த வாரம் வந்தன. இந்த யானைகளை ஒசூர் வனத் துறையினர் மீண்டும் கர்நாடக மாநிலத்துக்கு விரட்டப்பட்டது. இதில் 25 யானைகள் கோலட்டி அருகே வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் சாலிவாரம், தேன்கனிக்கோட்டை, நொகனூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பயிர் செய்துள்ள ராகி, காய்கறிகளை கால்களால் மிதித்தும், திண்றும் சேதப்படுத்தி வருகின்றன.  மற்ற யானைகள் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டப்பட்டன.
இங்கு தங்கியுள்ள யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர்கள் முனிராஜ், கதிரவன், பிரவின்ராஜ் மற்றும் விவசாயிகள் அந்த யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.