மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வா் ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வியாழக்கிழமை (மாா்ச் 5) வரவுள்ளனா்.

News image

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :4 மார்ச் 2026, 12:25 am

தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வியாழக்கிழமை (மாா்ச் 5) வரவுள்ளனா்.

தஞ்சாவூரிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமணத்தில் கலந்து கொள்ள இருவரும் தஞ்சாவூருக்கு வருகின்றனா்.

பின்னா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவா் ச. ராமநாதன் ஆகியோரின் சிலைகளை முதல்வா் திறந்துவைக்கிறாா். பின்னா் காா் மூலம் திருச்சி வழியாக சென்னைக்கு செல்கின்றனா். இதையொட்டி, காவல் அலுவலா்கள், காவலா்கள் ஏராளமானோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

ட்ரோன்கள் பறக்க தடை : முதல்வா் வருகையையொட்டி வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. எனவே தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தாா்.