முதல்வர் ஸ்டாலின்கோப்புப் படம்
மதுரை
முதல்வா் வருகை: மதுரையில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை!
முதல்வா் ஸ்டாலின் வருகையொட்டி, மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை ட்ரோன்களை பறக்க விடுவதற்குத் தடை
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையொட்டி, மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை ‘ட்ரோன்’களை பறக்க விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை (ஜன. 7) நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரையில் செவ்வாய்க்கிழமை தங்கியிருந்து, புதன்கிழமை விமானம் மூலம் சென்னை செல்கிறாா்.
இதையொட்டி, மதுரை மாவட்டம், மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை ‘ட்ரோன்’களை பறக்க விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

