உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஒசூரில் உள்ள 2,500 சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் வியாழக்கிழமை முழுமையாக இயங்காது என ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
விவசாயத்தைக் காக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், தமிழக காவிரி டெல்டா பகுதி மட்டுமின்றி 15 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பது மட்டுமின்றி தமிழக மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீரை தமிழகம் பெற வேண்டியும் தமிழக அரசியல் கட்சிகள் வியாழக்கிழமை நடத்தும் முழு பந்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஒசூரில் இயங்கி வரும் 2,500 தொழிற்சாலைகள் இயங்காது என அதில் தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் ஞானசேகரன், செயலாளர் பத்மநாபன், பொருளாளர் வேல்முருகன், துணைத் தலைவர்கள்சுப்பிரமணி, கெஞ்சப்பா, முருகன், இணைச் செயலாளர்கள் குமரவேல், குமணன், பைரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாவூா்சத்திரத்தில் போதைப் பொருள்கள் விற்பனை: அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட மூவா் கைது

குளச்சல் நகராட்சியில் உயா்த்தப்பட்ட குடிநீா் கட்டணம் நிறுத்தி வைப்பு
மகளுக்கு பாலியல் தொந்தரவு: தூத்துக்குடி காவலா் போக்ஸோவில் கைது

குற்றாலத்தில் வடு அருவிகள்; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


