விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சொத்துத் தகராறில் முதியவர் கொலை: இருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே சொத்துத் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:29 am

கிருஷ்ணகிரி அருகே சொத்துத் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள திம்மராயனஅள்ளியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி(32),  காவேரி(32). உறவினர்களான இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கோவிந்தசாமி, அவரது தந்தை ராஜமாணிக்கம் (60), பட்டம்மாள்(50), துளசி(80), உறவினர் ரூபா ஆகியோர் உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டனர். 
இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் கோவிந்தசாமி அளித்த புகாரின் பேரில், காவேரி, அவரது மனைவி செல்வி, காவேரியின் தந்தை கோவிந்தன் (60) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதேபோல கோவிந்தன் அளித்த புகாரின் பேரில், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
உயர் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லும் ராஜமாணிக்கம் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவேரி, கோவிந்தசாமி ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், தலைமறைவான செல்வியைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.