வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:28 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒசூரில்... தமிழக தொழிலாளர் முன்னணி அமைப்பு சார்பில் ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு அதன் மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒசூர்  தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், திராவிடர் கழக மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன், புரட்சிகர தொழிலாளர் முன்னணி அமைப்பின் நிர்வாகி குறிஞ்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் ஷாநவாஸ், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி கலீல், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி குமார் உள்பட பலர் பேசினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, ராம்நகர் அண்ணா சிலை முதல் காந்தி சிலை வரை பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கைகளை கோத்து மனிதச் சங்கிலி நடத்தினர்.
ஊத்தங்கரையில்...  தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் ஊத்தங்கரை நான்குமுனை சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் எம்.பிரகாசம் தலைமை வகித்தார். ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,மாநில செயற்குழு உறுப்பினர் பொன்ஆனந், நகரச் செயலாளர் சசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் சரவணன்,நிர்வாகிகள் காளி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக நகர அமைப்பாளர் அன்பரசு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.