பாஜக சொல்வதை தேர்தல் அதிகாரிகள் செய்வதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று(ஏப். 29) 142 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு இன்றுதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம், சிஆர்பிஎப் படையினர், பாஜகவினர் மீது மமதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
"எனது கட்சியும் நானும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் மேற்கு வங்கம் பற்றிய புரிதல் இல்லாத தேர்தல் அதிகாரிகள் பலர் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு அதிகாரி மேற்கு வங்கம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தினார். நான் இரவு முழுவதும் கண் விழித்திருந்தேன். திரிணமூல் காங்கிரஸ் முகவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு, அவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறார். திரிணமூல் காங்கிரஸை குறிவைக்கிறார்கள். இன்று காலையில் எனது கட்சியின் இளைஞரணித் தலைவர் கைது செய்யப்பட்ட்டுள்ளார். அதனால்தான், நான் சேத்லா பகுதிக்குச் சென்றேன். நான் காவல் நிலையத்திற்குச் செல்லவில்லை. எனது கட்சித் தொண்டர் ஒருவரே அங்கு சென்றார்.
நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 'குண்டர்கள்', மன்னிக்கவும், சிஆர்பிஎஃப் படையினர், உள்ளூர் காவல்துறையினரின் அனுமதியின்றி எனது தொகுதி 70-வது வார்டு கவுன்சிலரின் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தினர். அப்போது அவரது மனைவி குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். அவர் வீட்டில் இல்லை என்று கூறியபோதும், அந்த சிஆர்பிஎஃப் படையினர் அவர்களை காலால் எட்டி உதைத்தனர். அவர்களிடமிருந்த போனையும் பறித்துக்கொண்டனர். அவர் எந்தவொரு கட்சிப் பணியிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர். இதற்கான ஆதாரத்தை என்னால் காட்ட முடியும்" என்று கூறினர்.
Summary
Observers from outside doing what BJP says: Mamata Banerjee slams EC officials, CRPF
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மமதாவிடம் இருந்து திரிணமூலை கைப்பற்றும் ரிதப்ரதா பானர்ஜி! யார் இவர்?
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தில்லியில் அணிதிரளுவோம் - மமதா பானர்ஜி

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக மமதா பானர்ஜி மீது வழக்குப்பதிவு!
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



