கொல்கத்தா : பாஜகவை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் தில்லியில் ஒன்றுகூடி ஆலோசனையில் ஈடுபடவிருப்பதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் தங்கள் கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மமதா பானர்ஜி, “வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வெல்ல பாஜக மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் 177-இல் முறைகேட்டில் ஈடுபட்டது.
திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களை இத்தகைய இக்கட்டான காலத்தில் தவிக்கவிட்டுச் செல்ல மாட்டேன். தங்களுடைய வாழ்க்கையில் எனது ஆதரவால் பயன்பெற்றவர்கள் இப்போது துரோகிகளுடன் கைகோப்பது எம்மை வருத்தமடையச் செய்கிறது.
வங்கத்தை மோடி, சமூக விரோதிகள் புல்டோசர் கலாசாரத்தால் மகிழ்ச்சியடையும் அரசியல்வாதிகள் கைகளில் ஒப்படைத்து மாநிலத்தை இருளில் தள்ளிவிட்டார். பாஜகவை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் எங்களது நாடு தழுவிய செயல்பாடு குறித்து, தில்லியில் சந்தித்து முடிவெடுக்கும்” என்றார்.
Summary
Mamata - Anti-BJP parties to meet in Delhi to decide on our country-wide course of action
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் பானர்ஜி தாக்குதல்! கொல்கத்தாவில் மமதா நாளை தர்னா!
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!

மமதா பானர்ஜி தோல்வி! சுவேந்து அதிகாரி வெற்றி!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
விடியோக்கள்

இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட விடியோ! | VCK

முடிவை அறிவிக்கிறார் அண்ணாமலை | Annamalai | BJP | Modi | Annamalai new party

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


