தமிழ்நாட்டின் தலைவர் எனக் கூற முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு அதிகாரமில்லை என திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா இன்று (ஜூன் 2) குற்றச்சாட்டினார்.
மக்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தில் கூட விஜய் அரசியல் பேசியுள்ளதாகவும், முதல்வர் பதவிக்கு பொருத்தமாக விஜய் செயல்படவில்லை எனவும் விமர்சித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் விஜய்யின் திருச்சி பேச்சு குறித்து ஆ. ராசா செய்தியாளர்களுடன் பேசியதாவது:
திருச்சியில் எள்ளலும் துள்ளலுமாக விஜய் பேசியுள்ளார். அவருக்கு வீர வசனம் எழுதித்தந்தது யார்? பிரதமர் மோடியை 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார். அவருடன் என்ன பேசினார் என்பதைக் கூறாதது ஏன்?
மற்றவர்கள் எல்லாம் அல்லு சில்லு என்கிறார். ஆனால், அவர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களின் ஆதரவை வாங்கியது அரசியலா? திள்ளுமுள்ளா?
மின்சாரத் தடைக்கு திமுக காரணமா?
சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்கு மேம்படுத்துவதற்கு எதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கை சரி செய்வதில் முதல்வருக்கு என்ன பிரச்னை?
ஆர்பிஐ அனுமதி இல்லாமல் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது. இது கூட தெரியாமல் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறீர்கள். இதற்கு என்ன பெயர் வைக்கலாம்?
கோடை காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து கூடுதல் மின்சாரத்தைப் பெற வேண்டும். இதைச் செய்யக் கூட முடியவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டால், திமுக காரணம் எனக் கூறுகிறீர்கள்.
தொலைதூரத் திட்டம் என ஒன்றும் இல்லை முதல்வர் ப்ரோ. நியாயமான உங்கள் கோரிக்கைக்கு உடன் நிற்கத் தயார்.
தமிழ்நாட்டிற்கு நான் தான் தலைவர் எனக் கூற விஜய்க்கு எந்த உரிமையும் இல்லை. அனுமதியும் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நான் ஒருவன்தான் பேசக் கூடாது. உங்களை வேண்டாம் என்று 65% பேர் நிராகரித்துள்ளனர் என்பதை விஜய் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
முதல்வர் நாற்காலிக்கான மரியாதையை விஜய் குறைத்துக்கொள்ளக் கூடாது என ஆ. இராசா பேசினார்.
Summary
Vijay lacks the qualification to claim the title of Tamil Nadu's leader: A. Raja alleges.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்வி

முதல்வர் விஜய் தலைமையில் 7 பட்டியலின அமைச்சர்கள்! இதுவரை இல்லாத அதிகபட்சம்!!
தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா? எம்.எல்.ஏ. காமராஜ்
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள்- முதல்வர் விஜய்
விடியோக்கள்

இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட விடியோ! | VCK

முடிவை அறிவிக்கிறார் அண்ணாமலை | Annamalai | BJP | Modi | Annamalai new party

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி




