தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா இன்று (ஜூன் 2) கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டின் புதிய ஆட்சி அமைந்த பிறகு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு திமுக மீது பழி போடுவது எந்த வகையில் நியாயம் எனவும் வினவியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ. ராசா செய்தியாளர்களுடன் பேசியதாவது:
''திருச்சியில் எள்ளலும் துள்ளலுமாக விஜய் பேசியுள்ளார். அவருக்கு வீர வசனம் எழுதித்தந்தது யார்? பிரதமர் மோடியை 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார். அவருடன் என்ன பேசினார் என்பதைக் கூறாதது ஏன்?
மற்றவர்கள் எல்லாம் அல்லு சில்லு என்று மேடையில் பேசுகிறார். ஆனால், அந்த அல்லு சில்லுகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் ஆதரவை வாங்கியது அரசியலா? திள்ளுமுள்ளா?
விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை
முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை. எனக்கு நல்லா வார்த்தை வந்துவிடும் என்கிறார்? இது ஒரு முதல்வர் பேசக்கூடிய முறையா?
திமுகவை விமர்சிக்க வேண்டாம் எனக் கூறவில்லை. அதை முடித்துவிட்டு, பிரதமரை சந்தித்தது குறித்து பேசினீர்களா? மாநில வளர்ச்சிக்காக முன்வைத்த கோரிக்கைகள் குறித்து பேசினீர்களா?
நிர்வாகத்தைதான் 6 மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டோம் எனக் கூறினோம். ஆட்சியில் நடக்கும் அசம்பாவிதங்களை அல்ல.
காவல் துறை உங்கள் கட்டுப்பாட்டில்தானே உள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியதுதானே?
எந்தெந்த மாவட்டங்களில் சிங்கப் பெண் திட்டத்தில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் மும்மொழிக் கொள்கையை உள்ளே விடவில்லை. தேசிய கல்விக் கொள்கையை நாங்கள்தான் நிறுத்தினோம். புதிய கல்விக் கொள்கையை நாங்கள்தான் நிறுத்தினோம்.
விஜய் ப்ரோ, பிரதமருக்கு முன்பு உங்கள் சக்தி எங்கே போனது? அங்கு ஏன் வீர வசனத்துடன் அப்படி பேச மறுக்கிறீர்கள்? செய்தியாளரை சந்திக்க ஏன் மறுக்கிறீர்கள்?
காவி உடை, பக்ரீத் தீர்ப்பு குறித்து பேசாதது ஏன்?
எங்கள் மொழியை இனத்தை தாழ்த்துகிறவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காதவரை என்ன சொல்வது? திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது குறித்து எப்போது பேசுவீர்கள்?
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது குறித்து இப்போது பேச வேண்டாம் என்கிறார் தவெக அமைச்சர்.
கச்சத்தீவு தமிழர்கள் பிரச்னை. சட்டப்பேரவை அனுமதி இல்லாமலேயே கச்சத்தீவை மத்திய அரசு தாரை வார்த்தது. கச்சத்தீவு குறித்துப் பேசவே மாட்டார்.
பக்ரீத் தீர்ப்பு விவகாரத்தில் என்ன நிலைப்பாடு தவெக அரசு எடுத்துள்ளது. மும்மதங்களுக்கும் உரியவராக விஜய் தன்னை முன்னிலைப்படுத்துகிறார். ஆனால் இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பமாட்டார். முரண்களின் மூட்டையாக விஜய் இருக்கிறார்.
சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்கு மேம்படுத்துவதற்கு எதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கை சரி செய்வதில் முதல்வருக்கு என்ன பிரச்னை?
மின்சாரத் தடைக்கு திமுக காரணமா?
ஆர்பிஐ அனுமதி இல்லாமல் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது. இது கூட தெரியாமல் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறீர்கள். இதற்கு என்ன பெயர் வைக்கலாம்?
கோடை காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து கூடுதல் மின்சாரத்தைப் பெற வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டால், திமுக காரணம் எனக் கூறுகிறீர்கள்.
தொலைதூரத் திட்டம் என ஒன்றும் இல்லை முதல்வர் ப்ரோ. நியாயமான உங்கள் கோரிக்கைக்கு உடன் நிற்கத் தயார்.
தமிழ்நாட்டிற்கு நான் தான் தலைவர் எனக் கூற விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. உங்களை வேண்டாம் என்று 65% பேர் நிராகரித்துள்ளனர் என்பதை விஜய் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
முதல்வர் நாற்காலிக்கான மரியாதையை விஜய் குறைத்துக்கொள்ளக் கூடாது'' என ஆ. இராசா பேசினார்.
Summary
How can the DMK be held responsible for law and order issues asks A. Raja
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டின் தலைவர் எனக் கூற விஜய்க்கு அதிகாரமில்லை: ஆ. இராசா

சட்டம் ஒழுங்கு பிரச்னை: முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!

தமிழக சட்டம் -ஒழுங்கு நிலை: முதல்வா் விஜய் ஆலோசனை!

விஜய் வெற்றி : இப்போதான் களமே சூடு பிடித்துள்ளது - நடிகை ஜூலி
விடியோக்கள்

இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட விடியோ! | VCK

முடிவை அறிவிக்கிறார் அண்ணாமலை | Annamalai | BJP | Modi | Annamalai new party

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி




