பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

அபிஷேக் பானர்ஜி தாக்குதல்! கொல்கத்தாவில் மமதா நாளை தர்னா!

கொல்கத்தாவில் மமதா நாளை தர்னாவில் ஈடுபடுவது பற்றி...

 West Bengal CM Mamata Banerjee

மமதா பானர்ஜி - பிடிஐ

Published On :

கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தலைமையில் நாளை தர்னா போராட்டம் நடைபெறவுள்ளது.

மமதா பானா்ஜி மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி அடையாளம் தெரியாத நபா்கள் சனிக்கிழமை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், மமதா பானர்ஜியின் காளிகாட் இல்லத்தில் நேற்று பிற்பகலில் நடைபெறவிருந்தது.

ஆனால், இந்த கூட்டத்துக்கு வெறும் 20 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வந்ததால், கடைசி நேரத்தில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கிட்டத்திட்ட 60 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காதது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறியதாவது:

“எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முன்னதாகவே திட்டமிடப்பட்டது. அபிஷேக் பானர்ஜி மற்றும் திரிணமூல் தலைவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அவரவர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கூட்டத்துக்கு வர முடியவில்லை. கூட்டம் மற்றொரு நாளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக அடுத்த 48 மணிநேரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த கட்சி முடிவு செய்துள்ளது. மத்திய கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மமதா பானர்ஜி தலைமையில் தர்னா போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் மமதா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலா், ஆளும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த மாநில பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Abhishek Banerjee Attacked! Mamata to Stage Dharna in Kolkata Tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.