கிராம சக்தி அபியான் திட்ட கருத்தரங்கம்
கிருஷ்ணகிரியில் கிராம சக்தி அபியான் திட்ட கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.


கிருஷ்ணகிரியில் கிராம சக்தி அபியான் திட்ட கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏப்ரல் 14 முதல் மே 5-ஆம் தேதி வரையில் கிராம சுயாட்சி இயக்கக் காலமாக மேற்கொள்ளப்படுவதையடுத்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
இதில், கனிம வளத் துறை இயக்குநர் ஷாஷா, அரசு சார்புச் செயலர் நாகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் நரசிம்மன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உஜவாலா யோஜனா (தகுதியுள்ள குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்குதல்), உஜாலா (எல்இடி பல்புகளை வீடுகளில் பயன்படுத்துதல்), சவுபாக்யா (இலவச மின்சாரம் வழங்குதல்), ஜன்தன் யோஜனா (அனைவருக்கும் வங்கி கணக்கு), ஜீவன் ஜோதி பீமா யோஜனா (காப்பீட்டு திட்டம்), சுரக்ஷா பீமா யோஜனா (விபத்து காப்பீட்டுத் திட்டம்), மிஷன் இந்திரதனுஷ் (குழந்தைகள்- கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல்) உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. இவற்றில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...