பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், முதியோர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுதந்திர தின விழா உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், முதியோர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுதந்திர தின விழா உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள நாளந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் நிறுவனர் கொங்கரசன்,  தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளியின் இயக்குநர்கள் கே.கௌதம், கே.புவியரசன், முதல்வர் பார்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.பி.கோவிந்தன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சி.கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ராயக்கோட்டை வனச் சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வனச் சரகர் பாபு தேசியக் கொடியை ஏற்றினார்.
கிருஷ்ணகிரியில் உள்ள கேப்பேபிள் பவுண்டேசன் டிரஸ்ட் சார்பில் டிக்னிட்டி முதியோர் இல்லத்தில் நடைபெற்ற விழாவுக்கு டிரஸ்டின் நிர்வாகி டேனியல் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். 
பாரத் இண்டர் நேஷனல் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி ஆகியோர் தலைமை வகித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
வேப்பன அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் சசிகலா தலைமை வகித்தார். வேப்பனஅள்ளி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன் தலைமை வகித்தார்.
அதுபோல கிருஷ்ணகிரி அருகே கட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணகிரி அறிவியல் கலை கல்லூரி, கல்வியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரிகளின் தலைவர் வள்ளி பெருமாள் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றினார். 
பர்கூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வட்டாட்சியர் மது செழியன் தலைமை வகித்தார். பர்கூர் தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு மலர் மாறன் தலைமை வகித்தார். காமராஜர் சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் அதன் தலைவர் முரளி தேசிய கொடியை ஏற்றினார். 
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதல்வர் சௌ.கீதா தலைமை வகித்தார்.  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.