கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள், செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக சென்றனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காத்திருப்புப் போராட்டம், உண்ணாவிரதம், மக்களைத் தேடி உரிமைப் போராட்டம், உரிமைத் தேடி போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இத்தகைய நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஊர்வலத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தம்பிதுரை, முன்னாள் மாவட்டச் செயலாளர் திம்மராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகே தொடங்கிய ஊர்வலம், தர்மராஜர் கோயில் சாலை, பெங்களூரு சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
மாவட்ட மாறுதலை ஒரே சமயத்தில் மாநிலம் முழுவதும் நடத்த வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வித் தகுதியை படிப்படியாக உயர்த்த வேண்டும், புதிதாக கிராம நிர்வாகத் துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி
சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 98-ஆக உயா்வு

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 09) - மேஷ ராசிக்கு முன்னேற்றம்!

இன்றைய ராசி பலன்கள் (09.08.2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு!

ஜப்பானைத் தாக்கிய ‘டால்பின்’ புயல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


