கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு: போலீஸார் குவிப்பு

போச்சம்பள்ளி அருகே உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:41 am IST

போச்சம்பள்ளி அருகே உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் போலீஸார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் இருந்து திருப்பூர் மாவட்டம், காங்கயம் துணை மின்நிலையம் வரை உயர்மின் கோபுரம் அமைத்து, மின்கம்பிகள் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் வேலூர்,  கிருஷ்ணகிரி, தருமபுரி,  சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, போச்சம்பள்ளியை அடுத்த கரடியூர் கிராமத்தில் ஒரிரு மாதங்களாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் விளைநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தென்னை, மாமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உயர்மின் கோபுரம் அமைக்க வெட்டப்பட்ட மரங்களை அண்ணாமலைபுதூர் பகுதியில் குவித்து வைக்கும் பணி திங்கள்கிழமை நடந்தது. அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து போச்சம்பள்ளி போலீஸார், சின்னக்கரடியூர், அண்ணாமலைபுதூர் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.