தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:37 am

DIN

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
தேன்கனிக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளது. மாநில அரசியலில் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.  பாஜகவும் மாற்றத்திற்கு தயாராகிவருகிறது. மொழி அரசியல் நடைபெறும் தமிழகத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தவில்லை.  இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் ஏழை மக்களுக்காக சிறந்த திட்டமாக மருத்துவக் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுவது அவரது சொந்தக் கருத்து.  அரசியல் களத்துக்கு நடிகர்கள் வந்த பிறகே எனது கருத்தை தெரிவிப்பேன்.  காவிரியிலிருந்து தண்ணீர் பெற்றுத் தர தமிழக பாஜக முனைப்புடன் செயல்படுகிறது என்றார்.
 கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தளி தொகுதி பொறுப்பாளர் நாராயணன் தலைமை தாங்கினார்.  மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன்,  மாவட்ட தலைவர் முனிராஜ், மாநில இளைஞர் அணி செயலாளர் நாகராஜ்,  நகர தலைவர் பார்த்திபன், மாவட்ட பொதுச் செயலாளர் வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் கோடீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
தமிழிசை செளந்தரராஜனுக்கு ஒசூரில் மாவட்ட செயலாளர் ராஜி,  பாஜக ஒசூர் நகரத் தலைவர் சங்கர், நகர பொதுச் செயலாளர்கள் கிரிஷ், தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் போத்திராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.