ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முட்டைகோஸை தாக்கும் அந்துப்பூச்சியை கட்டுப்படுத்த யோசனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முட்டைகோஸ் பயிரைத் தாக்கும் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:35 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முட்டைகோஸ் பயிரைத் தாக்கும் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 950 ஹெக்டேர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த தோட்டக்கலைப் பயிரை வைர முதுகு அந்துப்பூச்சிகள் தாக்கப்படுவதால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அந்துப்பூச்சியின் புழுக்கள் முட்டைகோஸின் இளம் இலைகளையும், குருத்துகளையும் தாக்குகின்றன. 
இந்த இளம் புழுக்கள், இலைகளை துளையிட்டு பச்சையத்தை சுரண்டுகின்றன.மேலும், வளர்ந்த புழுக்கள், இலைகளை துளையிட்டு சேதப்படுத்தும். மகசூலை பெரிதும் பாதிக்கும் இந்த அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துவது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள லாலிகல் கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் தோ.சுந்தராஜ், விவசாயிகளுக்கு இந்த செயல்விளக்கத்தை அளித்தார். முட்டைகோஸ் பயிர்களுக்கு இடையே கவர்ச்சி பயிராக கடுகு பயிரை பயிரிடலாம். கடுகு பயிருக்கு மட்டும் டைக்குளோர்வாஸ் 0.076 சதவீதம் தெளித்து புழுக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம். 
இனக்கவர்ச்சி பொறியை ஹெக்டேருக்கு 12 வைக்கலாம். இனக்கவர்ச்சி பொறியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிர் சுழற்சி முறையில் பூசனி, தர்பூசணி, தக்காளி, அவரை போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.