கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த தேன்மொழி(38). இவருக்கும், சத்திவேல் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஞானசாய்(5) என்ற மகன் உள்ளார். தேன்மொழி திருப்பூர் நகர ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த தேன்மொழிக்கு, பிரசவத்துக்காக கிருஷ்ணகிரி வந்தார்.
கடந்த மார்ச் 5-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை இரண்டு நாள்களில் உயிரிழந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில், ஜூலை 3-ஆம் தேதி, தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!

ரூ. 10 லட்சத்துக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தும் ரெனால்ட்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

