பண்ணந்தூர்- அரசம்பட்டி இடையே புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் கிராமத்திலிருந்து அரசம்பட்டி வரை சுமார் 3 கி. மீ தொலைவுக்கு ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த தார்ச்சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் குண்டும்,குழியுமாக உள்ளது.
கொட்டவூர், செம்மன்மேட்டுக்கொல்லை, ஆதுக்கொல்லை, தருமதொப்பு என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இந்த சாலை வழியாக நாள்தோறும் பயணிக்கும் மாணவர்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலை புதுப்பித்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


