விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சுகாதார சூழ்நிலையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய அறிவுறுத்தல்

சுகாதார சூழ்நிலையில் உணவுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார் .

Updated On :5 நவம்பர் 2018, 7:33 am IST

சுகாதார சூழ்நிலையில் உணவுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விதவிதமான இனிப்புகள், காரங்கள் போன்ற உணவுப் பொருள்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவினர்களுக்கு அளிப்பதும் நமது கலாசாரமாக உள்ளது. 
இத்தகைய நிலையில், இனிப்பு, காரம் உணவுகளை தயாரிப்போர் மற்றும் விற்பனையாளர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு விவரச்சீட்டு இடும்போது, அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருள்களின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். 
உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில், பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவுப் பொருள்களின் விவரச் சீட்டு இருந்தால் மட்டுமே நுகர்வோர் வாங்க வேண்டும்.
மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம். 
உணவுப் பொருள் சம்பந்தமாக புகார் தெரிவிக்க, உணவுப் பாதுகாப்புத் துறையின் 9444042322 என்ற எண்ணிலோ அல்லது 04343-234444 மற்றும் 1077 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.