15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஒசூர் அருகே லாரி மீது பேருந்து மோதியதில் 10 பேர் காயம்

ஒசூர் அருகே நின்றிருந்த லாரி மீது கர்நாடக அரசு பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:34 am IST

ஒசூர் அருகே நின்றிருந்த லாரி மீது கர்நாடக அரசு பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.
ஒசூர் அருகே சப்படி கிராமத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கர்நாடக மாநில அரசுப் பேருந்து சனிக்கிழமை இரவு மோதியதில் காயமடைந்த 10 பேர் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தொடரும் விபத்துகள்...
தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரிகள் மீது அவ்வப்போது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவதைத் தடுக்க ஒசூர் டி.எஸ்.பி மீனாட்சி தலைமையில் கடந்த வாரம் அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு தகுந்த அறிவுரை வழங்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும், விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.