ஒசூரில் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.
ஒசூர் மத்தம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலைவாஷிங்டன். இவரது மகன் ஹரிகரன் (18). இவர் ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு உணவகம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மாணவர் மீது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலே மாணவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஒசூர் நகரக் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீஸார் மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேர் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!

திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம்

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


