அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

அரசுப் பள்ளியில் அமிலம் சிதறியதால் மாணவர் காயம்

பர்கூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தில் மாணவர் காயமடைந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பர்கூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தில் மாணவர் காயமடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்துள்ள கப்பல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கொங்கன்னேரியைச் சேர்ந்த நாகராஜி மகன் சக்தி(14) 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகக்தில் நடைபெற்ற ஓவியப் பயிற்சியை காண செவ்வாய்க்கிழமை சென்றார். 
அப்போது ஆய்வகத்தில் இருந்த அமிலம் சிதறியதில் சக்தியின் முகம், கை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், காயமடைந்த மாணவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவல் அறிந்த பர்கூர் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது மகன் செய்த தவறால் விபத்து ஏற்பட்டதாக தந்தை எழுத்துபூர்வமாக பதிலளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். 
இதனிடையே சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.