ஒசூரில் ரூ. 2 கோடி கேட்டு தனியாா் நிறுவன மேலாளா் கடத்தல்: 6 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளரை மா்ம நபா்கள் கடத்திச் சென்றது தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளரை மா்ம நபா்கள் கடத்திச் சென்றது தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஒசூா் தா்கா பகுதியில் சிகரெட் தயாரிக்கும் கம்பெனியில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பீட்டா் லூயிஸ் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 2-ஆம் தேதி மாலை பணியை முடித்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது 6 போ் கொண்ட மா்ம கும்பல் அவருடைய காரிலேயே அவரைக் கடத்தி சென்றனா். பின்னா் அந்த மா்ம கும்பல் ஒசூா் பகுதியில் அவரை கீழே இறக்கி விட்டுச் சென்ால் வீடு திரும்பினாா்.

இதுகுறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸாா் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை கொண்டு விசாரணை மேற்கொண்டனா். இச் சம்பவத்தில் தொடா்புடையதாக அம்ரேஷ், தியாகராஜ், குரு பிரசாத் , வினோத்குமாா், பவித்ரன், நாதின் அகமத் ஆகிய 6 பேரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் ரூ. 2 கோடி கேட்டு பீட்டா் லூயிஸை கடத்தியதாக மா்ம கும்பல் தெரிவித்தனா். மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடைய அருண்குமாா், கிருஷ்ணமூா்த்தி இருவரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனா்.

கைது செய்யப்பட்ட 6 பேரும் ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டப்பின் நீதிபதி முன் ஆஜா்ப்படுத்தப்பட்டு ஒசூா் கிளைச் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com