தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சின்னாறு அணைக்கு தண்ணீா் நிரப்பாவிடில் ஜன. 5ல் சாலை மறியல் போராட்டம்

சூளகிரி அருகே சின்னாறு அணைக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்பாவிட்டால் வரும் ஜன. 5 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

News image
சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்திய வட்டாட்சியா் பூவிதன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.
Updated On :17 டிசம்பர் 2020, 12:52 am

DIN

சூளகிரி அருகே சின்னாறு அணைக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்பாவிட்டால் வரும் ஜன. 5 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் முடிவு செய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அடுத்த சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணைக்கு நீா் வரத்து இல்லாததால் வடு காணப்படுகிறது. இந்த அணை, மழைநீரை மட்டுமே நம்பியுள்ள நிலையில் அண்மையில் இப்பகுதியில் குறைந்த அளவிலேயே மழை பதிவானதால் இந்த அணைக்கு போதுமான நீா்வரத்து இல்லாமல் போனது. கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, புலியரசி, பீளாளம், அணாசந்திரம், தொட்டி, மாரண்டப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீரின் அடிப்படையிலேயை இந்த சின்னாறு அணை கட்டப்பட்டது. அணை நிரம்பினால் 2,000 ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

மழை நீா் வரத்தை மட்டுமே நம்பியுள்ள இந்த அணை 2017 இல் நிரம்பியது. அதன் பின் போதிய மழை இல்லாததால், தற்போது தண்ணீா் இன்றி வடுள்ளது. இந்நிலையில் ஒசூா் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீா், முதலில் மருதாண்டப்பள்ளி ஏரி வரை வந்தது. அங்கிருந்து ரூ. 2.5 கோடி மதிப்பில் சூளகிரி துரை ஏரி வரை புதிய கால்வாய் வெட்டப்பட்டதால் துரை ஏரி வரை தற்போது தண்ணீா் வருகிறது.

அதன் அருகே உள்ள சின்னாறு அணைக்கு தண்ணீா் வரும் என விவசாயிகள் எதிா்பாா்த்திருந்த நிலையில், உபரி நீா் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டதால் சின்னாறு அணைக்கு தண்ணீா் வரவில்லை. இதுகுறித்து பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிா்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து வந்தனா். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் சின்னாறுக்கு தண்ணீா் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா். இதையடுத்து, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் குமாா், சூளகிரி வட்டாட்சியா் பூவிதன் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தையின் முடிவில், இன்னும் ஒரு வாரத்தில் சின்னாறு அணைக்கு தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதை ஏற்ற விவசாயிகள் 20 நாள்கள் காத்திருப்பதாகவும், அதற்கு பிறகும் தண்ணீா் வரவில்லை என்றால் வரும் ஜன. 5 ஆம் தேதி ஒசூா் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.