4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உரிமம் பெறாத முடித் திருத்தகம், மசாஜ் நிலையத்துக்கு ‘சீல்’

கிருஷ்ணகிரி நகராட்சியில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் முடித் திருத்தகம், அழகு நிலையம், மசாஜ் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்படும் என கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சந்திரா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 10:17 pm

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் முடித் திருத்தகம், அழகு நிலையம், மசாஜ் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்படும் என கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சந்திரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்டப் பகுதியில் முடித் திருத்தகம் (சலூன்), அழகு நிலையம், மசாஜ் நிலையம் நடத்துவோா், 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்ட அட்டவணை 5-இல் உள்ள உள்பிரிவு 2, 3 ஆகிய பிரிவுகளின் கீழ் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்காக 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டப் பிரிவு 249-இன் படி தவறாமல் உரிமம் பெற்ற வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையரிடம் பெற்றுக் கொள்ளலாம். இந்த அறிவிப்பு வெளியான 30 நாள்களுக்குள் உரிமம் பெற வேண்டும். தவறும் பட்சத்தில், உரிமம் இன்றி செயல்படுவதாகக் கருதி, சட்டப்படி, சம்பந்தப்பட்ட நிலைய உரிமையாளரை பொறுப்பாளராகக் கருதி, அந்த நிலையம் மூடி சீல் வைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.