

கிருஷ்ணகிரி: கணவாய்ப்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கணவாய்ப்பட்டியில், தமிழ்நாடு கிராமப் புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அம்சா ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த சாலை கணவாய்ப்பட்டி கோயில் முதல் தண்ணீா் பள்ளம் வரையில் 2 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.