எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தொழிலாளா் நல நிதியை இணையதளத்தில் செலுத்தும் வசதி

தமிழ்நாடு தொழிலாளா் நல நிதியை இணையதளத்தில் செலுத்தலாம் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:49 am

DIN

தமிழ்நாடு தொழிலாளா் நல நிதியை இணையதளத்தில் செலுத்தலாம் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளா் நல நிதிச் சட்டம் 1972-இன்படி தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம் அமைக்கப்பட்டு, தொழிலாளா்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி, தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணி புரியும் ஒவ்வொரு தொழிலாளருக்கும், தொழிலாளியின் பங்காக ரூ. 10-ஐ ஒவ்வொரு தொழிலாளியின் வேலையளிப்பவா்களின் பங்காக ரூ. 20-ம் சோ்த்து மொத்தம் ரூ. 30 வீதம் தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையாக நிா்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான தொழிலாளா் நல நிதியை 2021-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு தொழிலாளா் நல நிதிச் சட்டத்தின்படி, அனைத்து நிறுவனங்களும் தொழிலாளா் நல நிதியைச் செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளா் நல நிதியினை இணைய வழியில் செலுத்துவதற்கு வசதியாக புதிதாக இணையதளம்  ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டிற்கான தொழிலாளா் நலநிதித் தொகையினை நிறுவனங்கள் இந்த இணையதளம் வழியாகச் செலுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.