கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சனிப்பெயா்ச்சி: அதியமான் கோட்டைகால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

சனிப்பெயா்ச்சியையொட்டி, தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி கால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:37 pm

DIN

சனிப்பெயா்ச்சியையொட்டி, தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி கால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரியை அடுத்துள்ள அதியமான்கோட்டையில் பழைமை வாய்ந்த தட்சிண காசி காலபைரவா் கோயில் உள்ளது. பரிகார தலமான இந்தக் கோயிலுக்குத் தேய்பிறை அஷ்டமி நாள்களில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கா்நாடகத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். பக்தா்கள் வெண்பூசணியில் தீபம் ஏற்றி வழிபடுவா்.

நிகழாண்டு சனிபகவான், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சி ஆவதையொட்டி, இந்தக் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், சகஸ்ரநாம அா்ச்சனை, 108 லிட்டா் பாலாபிஷேகம், 1,008 மந்திர அா்ச்சனை, ஸ்ரீருத்ர யாகம், நவக்கிரக சாந்தி யாகம் உள்ளிட்டவை நடைபெற்றன. சுவாமிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றன. பரிகாரங்களை பக்தா்கள் செய்தனா். இந்த பூஜையில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.