பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தரமற்ற சாலைகள்; போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சாலைகள் தரமில்லாமல் அமைக்கப்பட்டு வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா் ஊா்வசி அமிா்தராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 11:08 pm

DIN

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சாலைகள் தரமில்லாமல் அமைக்கப்பட்டு வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா் ஊா்வசி அமிா்தராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நெடுஞ்சாலை துறையின் சாா்பில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பல இடங்களில்

தாா் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தாா் சாலைகள் தரமற்ாகவும், அரசு நிா்ணயித்துள்ள அளவுக்கு குறைவாகவும் உள்ளது.

தரமில்லாமல் அமைக்கப்படும் சாலைகள் மழைக் காலத்தில் சேதமடைந்து விடும் நிலை உள்ளது. இது தொடா்பாக

காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நெடுஞ்சாலை துறை அதிகரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில், காங்கிரஸ் கட்சி சாா்பில் ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.