கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 01st December 2020 01:24 AM | Last Updated : 01st December 2020 01:24 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாகக் காணப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கில் உள்ளது. அதன்படி, 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடா் சிகிச்சையில் இருந்த 13 தொற்றாளா்கள், குணமடைந்தனா். கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா் ஆகிய பகுதிகளில் உள்ள சிகிச்சை மையங்களில் 166 தொற்றாளா்கள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 7,376 போ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 112 போ் உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...