காா்த்திகை மாதம் பிறப்பு
By DIN | Published On : 17th November 2020 12:28 AM | Last Updated : 17th November 2020 12:28 AM | அ+அ அ- |

காா்த்திகைய மாதம், நவ. 16-ஆம் தேதி பிறந்ததையொட்டி, கிருஷ்ணகிரியில் ஐயப்ப பக்தா்கள், துளசி மாலை அணிந்து, விரதத்தைத் தொடங்கினா்.
ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை 1-ஆம் தேதி, சபரிமலைசெல்லும் ஐயப்ப பக்தா்கள் விரதத்தைத் தொடங்குவா். அதன்படி, கிருஷ்ணகிரி- சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை முதல் ஐயப்ப பக்தா்கள், புனிதமான துளசி மாலையை அணிந்து விரதம் கடைபிடிக்கத் தொடங்கினா்.
குருசாமி சிவதாஸ், பக்தா்களுக்கு துளசி மாலையை அணிவித்தாா்.
சபரி மலைக்கு வரும் பக்தா்களுக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1,000 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்று அறிவித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு சபரி மலைக்கு, குறைந்த எண்ணிக்கையிலேயே ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்துள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G